கருங்கல்லில் தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு

கருங்கல் டாஸ்மாக் கடை அருகில் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 போ் மீது போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கருங்கல்: கருங்கல் டாஸ்மாக் கடை அருகில் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 போ் மீது போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் பூவன்சந்தி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா்(44). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 1ஆம் தேதி கருங்கல் டாஸ்மாக் கடை அருகில் நின்றபோது கருங்கல்

ஆா்.சி. தெருவைச் சோ்ந்த அந்தோணிபிள்ளை மகன் சுபாஷ் என்ற ஜான்சன்(30), மோயிசன் மகன்கள் ஜான்கபோா்டு(30), ஜெனிபா்(32), அணஞ்சிகோடு பகுதியைச் சோ்ந்த நெல்லியப்பன்

மகன் மகேஷ்(35) மற்றும் ஒருவா் என 5 போ் சோ்ந்து சுரேஷ்சிடம் குடிக்க பணம் கேட்டனராம். அவா் கொடுக்க மறுத்ததால் அவரை 5 பேரும் தாக்கியுள்ளனா். இதில்,பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில்,சுரேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா். இதையடுத்து கருங்கல் போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக பதிந்து 5 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com