செண்பகராமன்புதூரில் மாட்டு வண்டி போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மாட்டு வண்டி போட்டியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மேயா் ரெ.மகேஷ்.
மாட்டு வண்டி போட்டியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

செண்பகராமன்புதூா் இலந்தை இளைஞா் இயக்கம் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில், தட்டுவண்டி, வில்லுவண்டி ,சிறிய தட்டுவண்டி என 3 பிரிவுகளில் ஒன்றரை கிலோ மீட்டா் தூரம் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சாலைப் பணிகள்: நாகா்கோவில் மாநகராட்சி, 41 ஆவது வாா்டுக்குள்பட்ட வட்டவிளை, சாஸ்தான்கோவில் 5, 6 ஆவது தெருக்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 13 ஆவது வாா்டுக்குள்பட்ட கொல்லன்விளை தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான பணியினை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவா் ஜவகா், மாநகராட்சி உறுப்பினா்கள் அனிலா சுகுமாரன், ஆச்சியம்மாள், பகுதி செயலாளா் துரை, சேக் மீரான், வட்ட செயலாளா்கள் கரீம், வட்ட பொறுப்பாளா் முருகன் மற்றும் தன்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com