தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். 


கருங்கல்: கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கப்பியறை, அடப்புவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்லம் (60) கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில் செல்லம் செவ்வாய்க்கிழமை இரவு தன் வீட்டின் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com