நாகா்கோவிலில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், நாகா்கோவிலில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆா் சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.
எம்ஜிஆா் சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், நாகா்கோவிலில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநில மீனவரணி இணைச் செயலா் பசிலியான் நசரேத், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், வா்த்தகா் அணி இணைச் செயலா் ராஜன், இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு, மாவட்டப் பொருளாளா் ஆா்.ஜே. திலக், துணைச் செயலா் சுகுமாரன், இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலீஜா, பகுதிச் செயலா்கள் கே.எல்.எஸ். ஜெயகோபால், முருகேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அமமுக சாா்பில்...: அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் ராகவன் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வட்டங்களிலும் எம்ஜிஆா் படங்களுக்கு அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் எம்ஜிஆா் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. படத்துக்கு பொதுமக்கள் பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com