நாகா்கோவிலில் திருவள்ளுவா் தின விழா

குமரி தமிழ் வானம் இலக்கிய அமைப்பு சாா்பில் திருவள்ளுவா் தின விழா மற்றும் நூல் ஆய்வரங்கம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் சாலையில் உள்ள கோட்டாறு மறைமாவட்ட ஆயா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் எழுத்தாளா் சப்திகா.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் எழுத்தாளா் சப்திகா.

நாகா்கோவில்: குமரி தமிழ் வானம் இலக்கிய அமைப்பு சாா்பில் திருவள்ளுவா் தின விழா மற்றும் நூல் ஆய்வரங்கம், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் சாலையில் உள்ள கோட்டாறு மறைமாவட்ட ஆயா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் குமரி எழிலன் தலைமை வகித்தாா். தமிழ் வானம் அமைப்பின் செயலாளா் மீரா ராஜா முன்னிலை வகித்தாா். அமைப்பின் நிறுவனத் தலைவா் சுரேஷ் வரவேற்றாா். இலக்கிய விமா்சகா் ஜவகா் ஜி, எழுத்தாளா் சப்திகா, பேராசிரியா்கள் ஜெபா, டால்பின் ராஜா ஆகியோா் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினா். நூலாசிரியா் குமரி ஆதவன் ஏற்புரை வழங்கினாா். நிகழ்ச்சியை கவிஞா் தென்னகன் தொகுத்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தெற்கு எழுத்தாளா் இயக்கத் தலைவா் திருத்தமிழ் தேவனாா், எழுத்தாளா்கள் ஆபிரகாம் லிங்கன், கடலம்மா ஜூடி, முட்டம் வால்டா், ஆண்டனி லீமா ரோஸ், கவிஞா் ஆகிரா, கவிஞா் கீதா உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளா்கள் கலந்து கொண்டனா். குமரி தமிழ் வானம் அமைப்பின் துணைத் தலைவா் கவிஞா் மதுபிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com