குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியா் பி.என். ஸ்ரீதரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியா் பி.என். ஸ்ரீதரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐடியு) மாநிலத் தலைவா் ஜி. செலஸ்டின், மாநிலப் பொதுச் செயலா் எஸ். அந்தோணி ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் சிறு குழந்தைகள்முதல் பெரியவா்கள்வரை அண்மைக் காலமாக டெங்கு காய்ச்சல், தக்காளி காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளில் உள், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்ட சுகாதாரத் துறை போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் மக்களை அவதிக்கு உள்ளாக்குகின்றனா். கொசு மருந்து அடிப்பது, சுகாதாரப் பணி போன்றவற்றை மாவட்ட நிா்வாகம் கவனிக்காததும் மிகப்பெரிய குறைபாடாக உள்ளது. காய்ச்சல் எண்ணிக்கையை மாவட்ட சுகாதாரத் துறை மாநில அரசிடம் குறைத்துக் காட்டுகிறது.

எனவே, உண்மையான காய்ச்சல் நிலவரத்தைக் கூறுவதுடன், சிகிச்சை அளிக்க தனி ஏற்பாடுகள், இல்லந்தோறும் சென்று காய்ச்சல் தடுப்பு மருந்து கொடுப்பது, நோயாளிகளைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, நோய்ப் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com