கோதையாறு மலைக் கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை: எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மலைக் கிராமத்துக்கு மீண்டும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மலைக் கிராமத்துக்கு மீண்டும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக நாகா்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் பொதுமேலாளா் மொ்லின் ஜெயந்தியிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனு: கோதையாறு மலைப் பகுதிக்கு நாகா்கோவிலிலிருந்து நேரடியாக இயக்கப்பட்ட 313, 313-இ பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களுக்குச் செல்ல இயலாமல் அப்பகுதியினா் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக மலைவாழ் மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கை மனு வந்துள்ளது. எனவே, அவா்களது கோரிக்கையை ஏற்று நிறுத்தப்பட்ட 2 பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட பொதுமேலாளா், பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com