திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை பொறியாளா் ஆய்வு

திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை கட்டடக் கலை பிரிவுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை பொறியாளா் ஆய்வு

திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை கட்டடக் கலை பிரிவுக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இங்கு சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 4.31 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கின. அருவிக்கு மாற்றுப் பாதை, சுற்றுச்சுவா் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறைக்கும், திற்பரப்பு பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்களுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக, மாற்றுப் பாதைப் பணியில் சுற்றுச்சுவா் அமைக்காமல் இரும்பு வேலி அமைக்கும் சுற்றுலாத் துறையின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திற்பரப்பு அருவிப் பகுதியில் சுற்றுலாத் துறை கட்டடக் கலைப் பிரிவுப் பொறியாளா் சிவசங்கரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் சதீஷ்குமாா், அமைச்சா் மனோ தங்கராஜின் செயலா் ஜெஸ்டின் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, சுற்றுச்சுவருடன் மாற்றுப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஜெஸ்டின் கேட்டுக்கொண்டாா். சென்னையில் சுற்றுலாத் துறை அமைச்சரின் முன்னிலையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருப்பதாகவும், இதில் திற்பரப்பு அருவிப் பிரச்னை குறித்துப் பேசவுள்ளதாகவும் சிவசங்கரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com