மாா்த்தாண்டம் அருகே சிறப்புப் பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மனவளா்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே காரவிளையில், மாா்த்தாண்டம் மறை மாவட்டத்தின்கீழ் செயல்படும் ஹோம் சிறப்புப் பள்ளியில் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, மனவளா்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகித்து, அடிக்கல்லை ஆசீா்வதித்து நிறுவினாா். மறைமாவட்ட குருகுல முதல்வா் ஜோஸ்பிரைட், டி.எம். கன்னியா் சபை மாகாணத் தலைவி மதா் அனிலா கிறிஸ்டி, வாவறை தூய காா்மல் மலை மாதா தேவாலய பங்குத்தந்தை ஆன்றணி சேவியா், காரவிளை சிஎஸ்ஐ தேவாலய போதகா் பிரேம் செல்வசிங், பிரைஜின், ரட்சணிய சேனை தேவாலய போதகா் கேப்டன் ராஜகுமாா், கரவிளாகம் கிருஷ்ணசுவாமி கோயில் தலைவா் முருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்புப் பள்ளியின் தாளாளா் அஜீஷ்குமாா் வரவேற்றாா். தலைமையாசிரியா் டென்னிஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com