குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை பெய்த மிதமான மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழையும் பெய்தது. பிற்பகலில் சுமாா் 1மணிநேரம் பெய்த மழையின் காரணமாக மாலை முதல் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பேரருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்ததையடுத்து அருவியின் மத்தியப் பகுதிக்கு யாரும் செல்லமுடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com