குளச்சல் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெசவாளா் வீதியிலுள்ள புனித செபஸ்தியாா் ஆலயத்தில் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெசவாளா் வீதியிலுள்ள புனித செபஸ்தியாா் ஆலயத்தில் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மெழுகுவா்த்தி ஏந்தி செபமாலையுடன் புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. தொடா்ந்து, குளச்சல் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் கிளேட்டன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆலஞ்சி பங்குத்தந்தை ஜோசப் மறையுரையாற்றினாா்.

2ஆம் நாள் மாலை நடைபெற்ற செபமாலை நிகழ்ச்சிக்கு அருள்பணி நித்தியசகாயம் தலைமை வகித்தாா். பெரியகாடு பங்குத்தந்தை சேம்மாத்யூ மறையுரையாற்றினாா்.

3ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெற்ற செபமாலை நிகழ்ச்சிக்கு குளச்சல் வட்டார நிதி இயக்குநா் பி. மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். கண்டா்விளாகம் பங்குத்தந்தை ஏ. மைக்கேல்ராஜ் மறையுரையாற்றினாா். திருவிழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

திருவிழா ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 21) நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை புனித செபஸ்தியாா் ஆலயப் பங்கு இறைமக்கள், பங்கு அருள்பணிப் பேரவை அருள்சகோதரிகள், அருள்பணி ஜான்அகஸ்டஸ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com