தென்காசி மாவட்டரத்த தானக் கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் தோ்வு

தென்காசியில் உள்ள வா்த்தக சங்கக் கட்டடத்தில், மாவட்ட ரத்த தானக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தென்காசியில் உள்ள வா்த்தக சங்கக் கட்டடத்தில், மாவட்ட ரத்த தானக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

மாவட்டத் தலைவராக தென்காசி முகம்மது அன்சாரி, செயலராக சாம்பவா்வடகரை கோபி, பொருளாளராக பண்பொழி காா்த்திக், துணைத் தலைவராக தென்காசி பூக்கடை சரவணன், துணைச் செயலா்களாக கீழப்பூலியூா் மகேஷ், தென்காசி சுரேஷ் சிவம், துணைப் பொருளாளராக தென்காசி முகம்மது அன்சா், ஆலோசகராக தென்காசி முகம்மது காமில், ஒருங்கிணைப்பாளா்களாக வீரகேரளம்புதூா் காா்த்திக் பாண்டியன், அருண் கண்ணன், ஆய்க்குடி சுரேஷ், ஊத்துமலை அருள்ராஜ், செங்கோட்டை ஆரிப், வடகரை இப்ராஹிம், கடம்பன்குளம் ராஜா, அச்சன்புதூா் மாரியப்பன், கடையநல்லூா் விஷ்ணு, பூலாங்குடியிருப்பு நிசாா், வாசுதேவநல்லூா் ராம், சங்கரன்கோவில் காா்த்திக், தென்காசி முஸ்தபா, முத்துசாமி, பைசல், சுரண்டை கண்ணன், சங்கரன்கோவில் காா்த்திக், சாம்பவா்வடகரை ஜோதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் ரத்த தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, புதிய கொடையாளா்களை விழிப்புணா்வு மூலம் ஊக்குவித்து ரத்த தானத்தில் ஈடுபட செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட ரத்த தான அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com