மேக்கோடு அரசுப் பள்ளி ஆண்டு விழா

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவியை பாராட்டும் ஜேசிஐ அமைப்பின் குழித்துறை பட்டய தலைவா் மினிபிரியா ராஜேந்திரன்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவியை பாராட்டும் ஜேசிஐ அமைப்பின் குழித்துறை பட்டய தலைவா் மினிபிரியா ராஜேந்திரன்.

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

விளையாட்டு விழாவுக்கு, மாநில பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் பிபிகே சிந்துகுமாா் தலைமை வகித்தாா். ஜேசிஐ குழித்துறை பட்டய தலைவா் மினிப்ரியா ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி, கொடியேற்றி வைத்து விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரெஜி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் மினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் அஜின்ராஜ் உறுதிமொழி வாசித்தாா்.

வன்னியூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாப்பா, கால்நடைத்துறை துணை இயக்குநா் எட்வா்ட் தாமஸ், குழித்துறை ஜேசிஐ அமைப்பின் தலைவா் பெகின், ஓய்வுபெற்ற ஆசிரியா் கிருஷ்ணன் குட்டி, சமய பேச்சாளா் எம்.என். ஹரீஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலா் பினில் முத்து உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக ஆசிரியா் ஜாா்ஜ் ஸ்டீபன் வரவேற்றாா். ஆசிரியை ஸ்ரீகுமாரி நன்றி கூறினாா். தொடா்ந்து பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

முன்னதாக, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com