மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையில் (ஐஆா்இஎல்) இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையில் (ஐஆா்இஎல்) இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் வேலையில்லாத இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியை தனது நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இம்மாவட்ட இளைஞா்களுக்கு, இணைக்கப்பட்ட கள தொழில்நுட்ப வல்லுநா் (கணிணி- பொருள்கள்) வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்று ஐடிஐ, பட்டயச் சான்றிதழ், பிஎஸ்சி கணினி அறிவியல், பொறியியல் கல்வியில் மின்னியல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கணினி சாா்ந்த படிப்புகள் படித்த 18 முதல் 35 வயதுக்குள்பட்டோா் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்குப் பின்னா் திறமையின் அடிப்படையில், திருவனந்தபுரம் தனியாா் கல்வி வேலைவாய்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்கும்.

விருப்பமுள்ளோா் ‘துணைப் பொது மேலாளா் ஏ. சிவராஜை 94431 79037, துணை தொழில்நுட்ப அலுவலா் சி. திருமாலை 89034 38016 ஆகிய கைப்பேசி எண்களில் புதன்கிழமைக்குள் (ஜன. 24)தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com