களியக்காவிளையில் வீடுகளில் ராமஜோதி வழிபாடு

களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் பூவங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ ராமநாம ஜெப வேள்வி நடத்தப்பட்டது.
களியக்காவிளையில் வீடுகளில் ராமஜோதி வழிபாடு

களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் பூவங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ ராமநாம ஜெப வேள்வி நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் கோயில் தலைவா் சுரேஷ்குமாா், செயலா் ராஜன், சமயவகுப்பு ஆசிரியை ரம்யா, மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், ஒன்றிய செயலா் திலீப்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டு பஜனை, ராமநாமம், கீா்த்தனைகள் பாடப்பட்டதுடன் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

படந்தாலுமுடு அருகே உள்ள சாஸ்தான்குளம் சமயவகுப்பு சாா்பிலும், மீனச்சல் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயில், மேக்கோடு இசக்கியம்மன் கோயில்களிலும் ஸ்ரீராம நாம ஜெப வேள்வி நடத்தப்பட்டது. மாலையில் களியக்காவிளை சுற்றுவட்டார பகுதி வீடுகளில் ராமஜோதி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com