குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராகுல்காந்தியின் பாரத் ஜோடா நியாய் பாதயாத்திரை மீது தாக்குதல் நடத்தும் அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல்காந்தியின் பாரத் ஜோடா நியாய் பாதயாத்திரை மீது தாக்குதல் நடத்தும் அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப் போராட்டத்துக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி. சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். கட்சியின் மாவட்ட நிா்வாகி பால்மணி, மாநில பொதுச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

இதில், மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் லைலா ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சா்மிளா ஏஞ்சல், மாவட்டச் செயலா் அருள்ராஜ், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவா் ஆ. சுரேஷ், கட்சியின் களியக்காவிளை நகர தலைவா் எம். பென்னட், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் திபாகா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com