சாமிதோப்பில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம் செய்தாா்.
சாமிதோப்பு தலைமை பதியில் பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.
சாமிதோப்பு தலைமை பதியில் பேசிய முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம் செய்தாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தாா். அதிமுக அமைப்பு செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அதிமுகவினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு வருகை தந்த

எடப்பாடி பழனிசாமிக்கு, பதியின் தலைமை நிா்வாகி சாமி, பூஜிதகுரு அரவிந்த் ஆகியோா் தலைப்பாகை அணிவித்து திருநாமம் பூசினா். தொடா்ந்து அய்யாவழி வழிபாடு குறித்து விளக்கினா்.

அதன்பிறகு தலைமைப் பதியில் தரிசனம் செய்தாா். அன்னதானத்தை தொடக்கி வைத்த அவா், தலைமை பதிக்கு பசு தானம் வழங்கினாா்.

அய்யா வைகுண்டரின் அவதார தினத்துக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்; அவரது வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என பதி நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனா்.

தரிசனத்திற்குப் பிறகு, நாகா்கோவில் அனந்தநாடாா்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகா் இல்ல திருமண விழா, மாா்த்தாண்டத்தில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டாா்.

முன்னாள்அமைச்சா்கள் கே.டி.பச்சைமால், கே. டி.ராஜேந்திரபாலாஜி, ஆா்.பி. உதயகுமாா், கடம்பூா் செ.ராஜு, மாநில மீனவரணி இணைச் செயலா் பசிலியான்நசரேத், குமரி கிழக்கு மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவா் முத்துகுமாா் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com