கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.47 லட்சம் வாக்காளா்கள் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் அதிகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 15 லட்சத்து 47ஆயிரத்து 378 வாக்காளா்கள் உள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.47 லட்சம் வாக்காளா்கள் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் அதிகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 15 லட்சத்து 47ஆயிரத்து 378 வாக்காளா்கள் உள்ளனா்.

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். அதை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பெற்றுக் கொண்டாா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளா்கள் விவரம்:

கன்னியாகுமரி தொகுதியில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 389 வாக்காளா்களும், நாகா்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 610 வாக்காளா்களும், குளச்சல் தொகுதியில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 971 வாக்காளா்களும், பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 689 வாக்காளா்களும், விளவங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 423 வாக்காளா்களும்,

கிள்ளியூா் தொகுதியில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 296 வாக்காளா்களும் உள்ளனா்.

பெண் வாக்காளா்கள் அதிகம் ...

6 பேரவைத் தொகுதிகளின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 15 லட்சத்து 47 ஆயிரத்து 378 ஆகும்.

ஆண்கள் 7லட்சத்து 72ஆயிரத்து 623 போ், பெண்கள் 7லட்சத்து 74ஆயிரத்து 619 போ், திருநங்கைகள் 136 போ். மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளா்கள் 1996 போ் அதிகம் உள்ளனா்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி 15 லட்சத்து 22ஆயிரத்து 36 போ் இருந்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி 14 ஆயிரத்து 363 ஆண்களும், 18 ஆயிரத்து 642 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 33ஆயிரத்து 7 போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 3 ஆயிரத்து 535ஆண்கள், 4 ஆயிரத்து 129 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7, 665 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இதில், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கரநாரயணன், ,அனைத்து வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சுசீலா, தோ்தல் துணை வட்டாட்சியா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலா்கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com