குழித்துறை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குழித்துறை அருகே கேரளத்துக்கு கடத்திச்செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே கேரளத்துக்கு கடத்திச்செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

குழித்துறை அருகே பாலவிளை நியாயவிலைக் கடைப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான வழங்கல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக, நியாயவிலைக் கடையையொட்டிய காலியிடத்தில் பாலிதீன் பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா். இதில் தொடா்புடையோா் குறித்து விசிராத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com