பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரா் கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தா்கள் தரிசனம்

பூதப்பாண்டி அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பூதலிங்கேஸ்வரா், சிவகாமி அம்பாள்.
சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பூதலிங்கேஸ்வரா், சிவகாமி அம்பாள்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம்பிடித்து இழுத்தனா்.

இக் கோயிலில் தைப்பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த ஜன.16- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

இவ் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் இருந்து விநாயகா் மற்றும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். பின்னா் தோ் வடம் தொட்டு இழுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வ.விஜய்வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி திருக்கோயில்கள் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி பேருராட்சி தலைவா் முத்துகுமாா், குமரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஏ.ஆா். பூதலிங்கம்பிள்ளை உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com