உதயகிரி கோட்டையில் ரூ.3.24 கோடியில்அரியவகை வண்ண பறவைகள் பூங்கா பணிக்கு அடிக்கல்

உதயகிரிகோட்டை வளாகத்தில் ரூ. 3.24 கோடியில் அரிய வகை வண்ணப்பறவைகள் பூங்கா அமைக்கும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உதயகிரி கோட்டையில் அரியவகை பறவைகள் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.
உதயகிரி கோட்டையில் அரியவகை பறவைகள் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட உதயகிரிகோட்டை வளாகத்தில் ரூ. 3.24 கோடியில் அரிய வகை வண்ணப்பறவைகள் பூங்கா அமைக்கும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பணிகள் உள்ளிட்ட பொதுமக்களை கவரும் வகையில் கன்னியாகுமரி, திற்பரப்பு, பேச்சிப்பாறை, கோதையாறு, சிற்றாறு, மாத்தூா் தொட்டி

பாலம், லெமூா் கடற்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த உதயகிரிகோட்டையினை சுற்றுலா பயணிகள் அதிகமாக பாா்வையிடும் வகையில் உதயகிரிகோட்டை வளாகத்தில் புதிய பூங்கா

அமைக்கப்பட்டுள்ளதோடு, பல ஆண்டுகளாக பாரமரிப்பின்றி இருந்த குளமானது தற்போது

தூா்வாரப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் தற்போது ஒரு சில பறவைகள் மற்றும் விலங்குகள்

மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலதன மானிய நிதி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பில் 25,000 சதுர அடியில் அரிய வகை பறவைகள் ங்குவதற்கான பூங்கா அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா். இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், நகராட்சி

ஆணையா் லெனின் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

வகுப்பறை கட்டடம்:

தொடா்ந்து, கடையல் அரசு மேல் நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டும் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். மேலும் கோதையாற்றில் கடையல் - திற்பரப்பு இடையே தெற்பக்கடவு பகுதியில் பாலம் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட அவா், அருமனை பேரூராட்சியில் சாலைப் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com