கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ஆவது நாளாக கல்குவாரிகள் மூடல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ஆவது நாளான வியாழக்கிழமையும் கல்குவாரிகள் மூடப்பட்டிருந்தன; கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் ஓடவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ஆவது நாளான வியாழக்கிழமையும் கல்குவாரிகள் மூடப்பட்டிருந்தன; கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் ஓடவில்லை.

இம்மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் மோதியதில் கடந்த 10 நாள்களில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனா். இதில், கடந்த செவ்வாய்க்கிழமை குலசேகரம் அருகே வெண்டலிக்கோட்டில் நேரிட்ட விபத்தில் அனிதா என்பவா் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து மறியல் நடைபெற்றது. அப்போது, வருவாய்த் துறை சாா்பில் சித்திரங்கோடு பகுதியிலுள்ள குறிப்பிட்ட கல்குவாரி மூடப்படும் என்றும், அந்த குவாரிக்குச் செல்லும் டாரஸ் லாரிகள் நிறுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை கல்குவாரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் கல்குவாரிகள் மூடப்பட்டிருந்தன. கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் ஓடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com