களியக்காவிளையில் புதிய சாலை திறப்பு

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் ரூ. 48.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
களியக்காவிளையில் புதிய சாலை திறப்பு

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் ரூ. 48.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

களியக்காவிளை பேரூராட்சி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட இந்த சாலையானது போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.48.85 லட்சத்தில் கான்கிரீட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பணி நிறைறவடைந்ததையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் மனோ தங்கராஜ், சாலையைத் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் ராஜேஷ்குமாா், களியக்காவிளை பேரூா் செயலா் பபின்லால், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவா் ஷாஜகான், கட்சி நிா்வாகிகள் எஸ். மாகீன் அபுபக்கா், தோமஸ் சிங், ராஜகுமாா், களியக்காவிளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் எஸ். சுனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com