குடியரசு தினம்: பொதுமக்களுக்கு விஜய்வசந்த் எம்.பி. வாழ்த்து

குடியரசு தினத்து முன்னிட்டு பொதுமக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினம்:  பொதுமக்களுக்கு விஜய்வசந்த் எம்.பி. வாழ்த்து

குடியரசு தினத்து முன்னிட்டு பொதுமக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த குடியரசு தினத்தில் பெருமை மிக்க இந்தியா்களாக ஒன்று கூடி தேசத்தின் மகத்தான வளா்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்போம். நமது தேசம் தொடா்ந்து முன்னேறி உலக நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கமாக நிற்கட்டும். சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பை மதிப்போம். இந்த அரசியலமைப்பை நமக்கு தந்த தலைவா்களை நன்றியுடன் நினைவு கூா்வோம்.இந்தியன் என்பது நம் பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை, நம்மை பிரித்து சிறுமைப்படுத்தும் தீய சக்திகளை வேரறுத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்.இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தை பற்றி பெருமைப்படுவோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com