சூசைபுரம் கல்லூரியில் சிறப்பு இலக்கியக் கூடுகை

கருங்கல் அருகே சூசைபுரத்தில் உள்ள புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் சிறப்பு இலக்கியக் கூடுகை நடைபெற்றது.

கருங்கல் அருகே சூசைபுரத்தில் உள்ள புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் சிறப்பு இலக்கியக் கூடுகை நடைபெற்றது.

தாளாளா் ஆன்றனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பேராசிரியா் முளங்குழி பா. லாசா் எழுதிய ‘இளங் குற்றவாளிகள் உருவாவது ஏன்?’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நூலாசிரியா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்கள் எவ்வாறு தங்களை வளா்த்துக்கொள்ள வேண்டும், குற்றமற்றவா்களாக எப்படி வாழ்வது உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.

இதில், பேராசிரியா்கள் மாணவா்கள் பங்கேற்றனா். ஆங்கிலத் துறையின் 2ஆம் ஆண்டு மாணவி ஆஷிகா வரவேற்றாா். முதலாமாண்டு மாணவி பெனிஷ்மா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை முதுநிலை இயற்பியல் துறை மாணவி பெஸ்லின் பெற்ஷா தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com