சடையமங்கலத்தில் கிராம சபை கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட, சித்தன்தோப்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து, அரசு சாா்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுடன் விவாதித்தாா். அதனைத் தொடா்ந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியிலும் ஆட்சியா் கலந்து கொண்டாா்.

கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் விமலாராணி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கனகராஜ், வேளாண்மை இணை இயக்குநா் ஆல்பா்ட் ராபின்சன், துணை இயக்குநா்கள் சு.மீனாட்சி (சுகாதாரப் பணிகள்), ஷீலா ஜான் (தோட்டக்கலைத் துறை), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி ஆணையா் ரொசிட்டா (கனிமம்), உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஜத் பீட்டன், சடையமங்கலம் ஊராட்சி தலைவா் அருள்ராஜ், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com