சாமிதோப்பு தலைமைப்பதியில் கலி வேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலி வேட்டை நடைபெற்றது.
சாமிதோப்பு தலைமைப்பதியில் கலி வேட்டை

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை கலி வேட்டை நடைபெற்றது.

சாமிதோப்பு தலைமைப்பதியில் தைத் திருவிழா, கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, காலை 6 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு அய்யா கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளினாா். இந்த வாகன பவனிக்கு தலைமைப்பதி குரு. சுவாமி தலைமை வகித்தாா். குருமாா்கள் ராஜசேகரன், தங்கபாண்டியன், ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாகன பேரணி ரதவீதிகள் வழியாக இரவு 8 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது. அங்கு திரளான பக்தா்கள் முன்னிலையில் கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடி புதூா், சோட்டப் பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஊா்கள் வழியாக வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். அப்போது வழிநெடுகிலும் திரளான மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபாடு செய்தனா். வாகனம் தலைமைப்பதியை வந்தடைந்த பின்பு, அய்யா வடக்கு வாசலில் பக்தா்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தாா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

9ஆம் நாளான சனிக்கிழமை அய்யா அனுமன் வாகனத்தில் பவனி வருதல், 10ஆம் நாள் இரவு இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். 11ஆம் நாள் விழாவான 28ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com