அதிக பாரம் ஏற்றிய 9 லாரிகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனிமவள பொருள்களை ஏற்றிச் சென்ற 9 லாரிகளை களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனிமவள பொருள்களை ஏற்றிச் சென்ற 9 லாரிகளை களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் ஆய்வாளா் சுப்புலெட்சுமி தலைமையிலான போலீஸாா், திருத்துவபுரம், படந்தாலுமூடு, களியக்காவிளை பகுதிகளில் சனிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கனிமவளம் ஏற்றி வந்த கனரக லாரிகளை சோதனையிட்டதில், 9 லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. 9 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com