களியக்காவிளை அருகே கனிமவள லாரி பறிமுதல்

களியக்காவிளை அருகே, அதிக பாரத்துடன் குண்டுக்கல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை அருகே, அதிக பாரத்துடன் குண்டுக்கல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு திருத்துவபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே கேரளம் நோக்கிச் சென்ற கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதிக பாரத்துடன் குண்டுக் கற்களை அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரியவந்தது. லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com