திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகளின் காரில் திருட்டு

குமரி மாவட்டம், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகளின் காரில் இருந்து கைப்பேசிகள் மற்றும் பணம் ஆகியவற்றை சனிக்கிழமை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டம், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகளின் காரில் இருந்து கைப்பேசிகள் மற்றும் பணம் ஆகியவற்றை சனிக்கிழமை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவனந்தபுரம் வெள்ளயாணி வண்டித்தடம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (42). இவா் கேரளத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறாா்.

இவா் தனது நண்பா்களுடன் ஒரு காரில் சனிக்கிழமை காலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தாா். காரை நிறுத்திவிட்டு அருவியில் குளிக்கச் சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது காரின் இடது பக்க கண்ணாடி திறந்திருந்தது. பின்னா் காருக்குள்ள பாா்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த விலை உயா்ந்த 2 கைப்பேசிகள், கேமரா, ஸ்மாா்ட் வாட்ச், ரொக்கம் ரூ.4500 ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஹரீஷ் அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com