தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ - ஜாக் கூட்டமைப்பினா் நாகா்கோவிலில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ - ஜாக் கூட்டமைப்பினா் நாகா்கோவிலில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொருளாளா் தியாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில துணைத் தலைவா் சேவியா், டிட்டோ -ஜாக் நிா்வாகிகள் கணேசன், ஆல்பா்ட், பாபு, ரமேஷ், மணிகண்டன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com