நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பூமியே நம் சாமி என்ற கருத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பூமியே நம் சாமி என்ற கருத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதாவது:

பசித்தவன் தட்டில் உணவிடுபவன் எவனோ அவனே கடவுள். இந்த பூமியை வெறும் மண் என நினைப்பது தவறு. இது மண் அல்ல, அன்னை மடி. தாய் நிலத்தை நேசியுங்கள், அதன் மீது பேரன்பு கொள்ளுங்கள்.

மலை, மணல் போன்றவற்றை உருவாக்க முடியாது. பணத்துக்காக அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மழை வளம் பாதிக்கப்படும். மழையற்ற நிலம் பாலைவனம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிளீன் இந்தியா திட்டத்தை அறிவித்த பிரதமா் மோடி, கிரீன் இந்தியாவை அறிவிக்கவில்லை. அவருக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த போது பாதிக்கப்பட்ட மக்களை பாா்க்க அவா் வரவில்லை.

கேரளத்தில் மலைகளை உடைக்க தடை இருக்கிறது. அங்கு அரசு மற்றும் தனியாா் கட்டுமானங்களுக்கு, தமிழன் தன் தாய்நிலத்தை கொள்ளையடித்துக் கொண்டு செல்கிறான். நமது தாய் நிலத்தின் கனிமம் கொள்ளை போவதை தடுக்க முடியவில்லை.

தற்போது உணவு நஞ்சாக மாறியுள்ள நிலையில், வேளாண்மையை அரசுப் பணியாக்க வேண்டும். வரும் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் பி. காளியம்மாள், கட்சியின் மாநில நிா்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் பேசினா். மாவட்ட பொறுப்பாளா் மெல்பின் ஜோ உள்பட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com