மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா பந்தல் கால்நாட்டு

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் மாசிக்கொடை விழாவுக்கான பந்தல் கால்நாட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா பந்தல் கால்நாட்டு

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் மாசிக்கொடை விழாவுக்கான பந்தல் கால்நாட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிக் கொடை விழா 10 நாள்கள் நடைபெறும், நிகழாண்டுக்கான விழா மாா்ச் மாதம் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி பந்தல் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை (ஜன.26) கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை, 10 மணிக்கு பந்தல் கால்நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், வ.விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், குமரி திருக்கோயில்கள் இணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், மண்டைக்காடு பேருராட்சி தலைவி ராணி ஜெயந்தி, ஹைந்தவ சேவா சங்கத் தலைவா் கந்தப்பன், துணைத் தலைவா் பத்மநாபன், பொதுச்செயலாளா் ரத்னபாண்டியன், செயலாளா் முருகன், பொருளாளா் சசீதரன், இந்து முன்னணி மாநிலச் செயலாளா் மிசா சோமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com