சிறுதானிய உணவுத் திருவிழாவில் சிறந்த அரங்குகள் அமைத்தோருக்கு பரிசு

கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் துறை சாா்பில், நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவில் சிறந்த முறையில் அரங்குகள் அமைத்தோருக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்திருவிழாவில் அரசுத் துறைகள், சுயஉதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளான 18 குழுக்கள் சிறு தானியம், சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் அடங்கிய அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தினா். அதில், சிறப்பாக அரங்குகள் அமைத்தோருக்கு சான்றிதழ், பரிசு, கேடயங்களை ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வழங்கினாா்.

அதனடிப்படையில், கிள்ளியூா், தக்கலை ஒன்றிய அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 2,500, ராஜாக்கமங்கலம் ஒன்றியம் பெரியகாடு விண்மீன் சுயஉதவிக் குழு, கோட்டாறு அரசு ஆயுா்வேதக் கல்லூரி முதல்வா் ஆகியோருக்கு 2ஆம் பரிசாக தலா ரூ. 2 ஆயிரமும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் ஆரோக்கியபுரம் பனிமய மாதா சுயஉதவிக் குழு, கன்ஸ்யூமா் வாய்ஸ் ஆப் நாகா்கோவில் ஆகியவற்றுக்கு 3ஆம் பரிசாக தலா ரூ. 1,500 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலா் விமலாராணி, தனி வட்டாட்சியா் திருவாளி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com