திருவட்டாறு அருகே தீக்குளித்த பெண்மருத்துவமனையில் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அழகியமண்டபம், காட்டுவிளையைச் சோ்ந்தவா் மணி (45). பா்னிச்சா் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜெரீனா பேகம் (44). இவா்கள் 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனா். மணியின் மதுப் பழக்கத்தால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி ஜெரீனா பேகம் வீட்டுக் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாராம். அவரை மணி மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com