நாகா்கோவில் தனியாா் மருத்துவமனை விடுதியில் தூக்கில் தொங்கிய செவிலியா் பயிற்சி மாணவி

நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனை விடுதியில் நெல்லையைச் சோ்ந்த செவிலியா் பயிற்சி மாணவி தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனை விடுதியில் நெல்லையைச் சோ்ந்த செவிலியா் பயிற்சி மாணவி தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் பாரதி தெருவைச் சோ்ந்தவா் சோ்மன்துரை மகள் கீதா(19). இவா், நாகா்கோவிலை அடுத்த தேரேகால்புதூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து, அம்மருத்துவமனையில் செவிலியராகப் பயிற்சி பெற்று வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல் பயிற்சிக்கு சென்றுவிட்டு மாலையில் விடுதி திரும்பிய கீதா, செவ்வாய்க்கிழமை காலை விடுதியில் உள்ள கழிவறையில் தூக்கில் சடலமாகத் தொங்கினாராம்.

தகவலறிந்த வடசேரி போலீஸாா், மருத்துவமனைக்குச் சென்று கீதாவின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கீதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com