புனித அல்போன்சா கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டி

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் ‘மகத்துவம் நிறைந்த பாரதம் மருத்துவம் இல்லா பாரதம்‘ என்ற

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் ‘மகத்துவம் நிறைந்த பாரதம் மருத்துவம் இல்லா பாரதம்‘ என்ற பொருளில் பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் ஆன்றனி ஜோஸ் தலைமை வகித்து யோகா போட்டியை தொடங்கி வைத்தாா். யோகா குரு கண்ணன், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் எ.பி. சீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு யோகா போட்டி நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில்,தமிழக அளவில் 78 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com