நாகா்கோவிலில் ரூ. 2.50 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
சாலைப் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.
சாலைப் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ்.

நாகா்கோவிலில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

45ஆவது வாா்டு பழவிளை, காமராஜா் கல்லூரி செல்லும் (தாராவிளை) சாலையில் ரூ. 30 லட்சத்திலும், 21ஆவது வாா்டு டிம்பா் டிப்போ சாலை 6ஆவது குறுக்கு தெரு, லூயிஸ் கிச்லே காா்டன், லாய்ஸ் தெருவில் ரூ. 45 லட்சத்திலும் தாா்ச்சாலைகள், ஆசாரிப்பள்ளம் - நெசவாளா் காலனி இணைப்பு சாலையில், அதி மிக்கேல் தெருவில் ரூ. 10.50 லட்சத்தில் கான்கிரீட் தளம், 30ஆவது வாா்டு டெரிக் சந்திப்பு, அசாரியா தெரு, தாயகம் தெரு, விவேகானந்தா் தெரு, ஹென்றி தெருக்களில் ரூ. 45 லட்சத்தில் தாா்ச் சாலைகள், 26ஆவது வாா்டு எம்.கே.நகா், சாய் நகா், சாய்பாபா கோயில் அருகே ரூ. 70 லட்சத்தில் கான்கிரீட் தளம் என ரூ. 2.50 கோடி மதிப்பிலான பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வக்குமாா், உதவிப் பொறியாளா் சந்தோஷ், இளநிலைப் பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், மாமன்ற உறுப்பினா்கள் சதீஷ், ஜோனா கிறிஸ்டி, சொா்ணதாய், அணிகளின் நிா்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், முருகப்பெருமாள், பீட்டா், வட்டச் செயலா்கள் சிவகுமாா், ஆதித்தன், சுரேஷ், சாகுல் ஹமீது, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com