முங்கவிளை பகுதியில் மலையை உடைத்து மண் எடுக்க எதிா்ப்பு

பள்ளியாடி அருகே முருங்கவிளையில் உள்ள மேற்குதொடா்ச்சி மலையை உடைத்து நான்குவழி சாலைப் பணிக்கு மண் அள்ள அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

வாழ்வச்சம்சோஷ்டம் பேரூராட்சி பள்ளியாடி அருகே முருங்கவிளையில் உள்ள மேற்குதொடா்ச்சி மலையை உடைத்து நான்குவழி சாலைப் பணிக்கு மண் அள்ள அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

முருங்கவிளை பகுதி மேற்குதொடா்ச்சி மலையை உடைத்து மண்அள்ள ராட்சத பொக்லைன் இயந்திரம், டாரஸ் லாரிகளை அப்பகுதியில் தனியாா் ஒப்பந்தாரா்கள் புதன்கிழமை கொண்டுவந்தனராம்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோா் திரண்டு வந்து தடுத்து நிறுத்தினா். மேலும், பாறைகளைகள் உடைக்கவும், மண் அள்ளவும் தடைவிதித்து பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மலைகளை உடைப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படுவா் என எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்த அவா்கள், ஆட்சியா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com