கடையாலுமூடு அருகே வேன் கவிழ்ந்து 10 போ் காயம்

குலசேகரம், ஜூலை 4: குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே திருமண

குழுவினா் சென்ற வேன் புதன்கிழமை இரவு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 போ் லேசான காயமடைந்தனா்.

தடிக்காரன்கோணம் பகுதியைச் சோ்ந்தவா்கள், கடையாலுமூடு அருகே

உள்ள மணமகன் வீட்டிற்கு புதன்கிழமை இரவு வீடு காணல் நிகழ்ச்சிக்காக வேனில் வந்தனா். பின்னா் அங்கிருந்து திரும்பிச் சென்றபோது, அம்பாடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேன் ஓட்டுநா் உள்பட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் வேனில் சிக்கியவா்களை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து கடையாலுமூடு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com