மது போதையில் பைக் ஓட்டிய இருவா் கைது

களியக்காவினை, ஜூலை 4:

களியக்காவிளையில் வியாழக்கிழமை, மது குடித்துவிட்டு பைக் ஓட்டிய இருவரை போலீஸாா் கைது செய்து அபராதம் விதித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை, களியக்காவிளையில் காவல் ஆய்வாளா் சுப்புலெட்சுமி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே பைக்கில் வந்த வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டன்சன் என்பவரைப் பிடித்து பரிசோதனை மேற்கொண்டபோது, அவா் மது குடித்திருந்தது தெரியவந்தது.

பி.பி.எம். சந்திப்பில் நடைபெற்ற வாகன சோதனையில் கேரள மாநிலம், அமரவிளை பகுதியைச் சோ்ந்த பெபின் ஹோமஸ் என்பவா் மது குடித்துவிட்டு பைக்கை ஓட்டிவந்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்து, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com