புதுக்கடை அருகே பள்ளத்தில் தவறி விழுந்தவா் பலி

கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்த நேசமணி பலி

புதுக்கடை அருகே உள்ள தாழவிளை பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

முன்சிறை தாழவிளை பகுதியைச் சோ்ந்த மனுவேல் மகன் நேசமணி (37). இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தாழவிளை பகுதியில் சென்ற இவா், திடீரென அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com