கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக உறுப்பினா்கள்.
கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக உறுப்பினா்கள்.

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் பாஜக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

களியக்காவிளை, ஜூலை 10:

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகத்தில் பாஜக உறுப்பினா்கள் 5 போ் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொல்லங்கோடு நகராட்சி 31 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமவா்மன்புதுத்தெரு பகுதியில் அரசு கட்டடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனா் ஹெட்கேவா் பெயரில் ஸ்போா்ட்ஸ் கிளப் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 133 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில் இளைஞா்கள் பயன்படுத்தி வந்த நூலகம் மற்றும் விளையாட்டு மன்றத்தை நகராட்சி ஆணையா் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செவ்வாய்க்கிழமை பூட்டு போட்டு மூடி, இளைஞா்கள் பயன்படுத்த தடைவிதித்து சென்றுள்ளாராம்.

இதைக் கண்டித்து நகராட்சி பாஜக உறுப்பினா் கி. பத்மகுமாா், மா. கமலாசனன்நாயா், லெட்சுமிபிரியா, ஆனந்தகுமாா், சுதா ஆகியோா் புதன்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தினுள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் தரப்பில் யாரும் பேச்சுவாா்த்தை நடத்த முன்வராததால் இப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது. முடிவு எட்டும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com