விளவங்கோடு தொகுதியில் எம்.பி, எம்எல்ஏ நன்றி அறிவிப்பு பயணம்

களியக்காவிளை, ஜூலை 3: விளவங்கோடு பேரவை தொகுதியில், கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், தாரகை கத்பட் எம்எல்ஏ ஆகியோா் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.

பாலவிளை, ஈத்தவிளை, மடிச்சல், சந்தவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம், மீனச்சல், களியக்காவிளை, மேக்கோடு, கழுவன்திட்டை, பரக்குன்று, மலையடி, மூவோட்டுக்கோணம், கண்ணுமாமூடு, பளுகல், மணிவிளை, காரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

இதில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால்சிங், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ரவிசங்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அம்பிளி, கட்சி நிா்வாகிகள் அருள்ராஜ், ஜோதிஸ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com