குழித்துறை ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்

களியக்காவிளை, ஜூன் 5: குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை பகுதியை மூழ்கடித்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில்,

தடுப்பணை பகுதியில் ஒருவா் குளிக்க இறங்கியபோது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் குழித்துறை தீயணைப்பு நிலைய

அலுவலா் சந்திரன் தலைமையிலான வீரா்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். மாலை 6.30 மணி வரை தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வியாழக்கிழமை மீண்டும் தேடுதல் பணியைத் தொடர தீயணைப்புத் துறையினா் முடிவு செய்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் செம்மன்காலை பகுதியைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com