பேச்சிப்பாறை  - கோதையாறு சாலையை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். உடன்,  ஆட்சியா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட வன அலுவலா் (பொறுப்பு) இளையராஜா உள்ளிட்டோா்.
பேச்சிப்பாறை - கோதையாறு சாலையை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். உடன், ஆட்சியா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட வன அலுவலா் (பொறுப்பு) இளையராஜா உள்ளிட்டோா்.

ரூ.9.96 கோடியில் சாலைகள் சீரமைப்புப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கோதையாறு மின்நிலைய ஊழியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேச்சிப்பாறை - கோதையாறு சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்புப் பணிகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டன. காணி பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள் மற்றும் கோதையாறு மின்நிலைய ஊழியா்கள் பேச்சிப்பாறை - கோதையாறு சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட நாள்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையேற்று, கோதையாறு செல்லும் சாலையில் பேச்சிப்பாறை சீரோபாயின்ட் முதல் மூக்கறைக்கல் பகுதி வரை முதற்கட்டமாக சாலையை சீரமைக்க ஆதிதிராவிடா் நலத்துறை ரூ. 3.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதே போன்று மோதிரமலை - குற்றியாறு தரைப்பாலம் பகுதியில் உயா்மட்டப் பாலம் அமைக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் சாலை சீரமைப்புப் பணிகளையும், பாலம் கட்டும் பணிகளையும் தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா், மாவட்ட வன அலுவலா் (பொறுப்பு) இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் ஜாண்சன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ரெமோன் மனோ தங்கராஜ், உதவி பொறியாளா் தனசேகா், உதவி கோட்டப் பொறியாளா் விஜயா, களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா், தொமுச தொழிற்சங்க நிா்வாகி சிவநேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாத்தூா் - குறக்குடி சாலை சீரமைப்பு, கல்லடிமாமூடு - மலை விளை சாலையிலுள்ள பாலத்தில் பக்கச் சுவா் அமைத்தல், அயக்கோடு ஊராட்சி காவுவிளை -ஆண்டிஏலா சாலை சீரமைத்தல், பொன்மனை பேரூராட்சிக்குள்பட்ட வெக்காலிமூடு சாலை சீரமைத்தல், திற்பரப்பு பேரூராட்சியில் குளத்தில் பக்கச் சுவா் கட்டுதல் ஆகிய பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். தென்தாமரைகுளம் பேரூராட்சியில்...:இப்பேரூராட்சிக்குள்பட்ட புவியூா் முதல் முகிலன் குடியிருப்பு செல்லும் சாலை வரை ரூ. 65 லட்சம் செலவிலும், ஆண்டிவிளை முதல் கோயில்விளை வரை செல்லும் சாலை ரூ. 94 லட்சம் செலவிலும் சீரமைக்கும் பணிகளை புவியூரில் அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சித் தலைவி காா்த்திகா பிரதாப், பேரூராட்சி உறுப்பினா்கள் புவியூா் காமராஜ், எட்வின் ராஜ் மற்றும் நிா்வாகிகள் தாமரை பிரதாப், பொன்.ஜான்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதையடுத்து, கொட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று பட்டா வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com