மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா: மாா்ச் 12 இல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு மாா்ச் 12 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. அன்றைய விடுமுறைக்கு ஈடாக, ஏப்ரல் மாதம் முதல் சனிக்கிழமை ( ஏப்.6) மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும். மேலும், மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com