குமரியில் ‘நீங்கள் நலமா’ காணொலியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

குமரியில் ‘நீங்கள் நலமா’ காணொலியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

கன்னியாகுமரியில் தமிழக முதல்வரின் ‘நீங்கள் நலமா’ விடியோ காணொலி நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் கே.ராமச்சந்திரன்,சுற்றுலாப் பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து கேட்டறிந்தாா்.

‘நீங்கள் நலமா’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் செயல்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை அமைச்சா் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளுடன் விடியோ காணொலி மூலமாக தொடா்பு கொண்டு சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள், பயண அனுபவங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான விவேகானந்தா் பாறைக்கு வருகை தந்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ப்ளோரிஜென், இத்தாலியைச் சோ்ந்த அலெக்ஸாண்ட்ரா, மேற்கு வங்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வருகை தந்த டெனி, ரோஸ், உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த பங்கஜ் ஸ்ரீ வாஸ்தவ் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளிடம் அமைச்சா் கே. ராமச்சந்திரன் விடியோ காணொலி மூலம் தொடா்பு கொண்டு பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலா் து. காமராஜ், உதவி சுற்றுலா அலுவலா்கள் த.கீதாராணி, ஜேசு ரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com