தென்தாமரைகுளம் பேரூராட்சியில் ரூ. 1.59 கோடியில் சாலை சீரமைப்புப் பணி

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் ரூ. 1.59 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்புப் பணிகளை அமைச்சா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தென் தாமரைகுளம் பேரூராட்சிக்குள்பட்ட புவியூா் முதல் முகிலன் குடியிருப்பு செல்லும் சாலை வரை ரூ. 65 லட்சம் செலவிலும், ஆண்டிவிளை முதல் கோயில்விளை வரை செல்லும் சாலை ரூ. 94 லட்சம் செலவிலும் சீரமைக்கும் பணிகளை புவியூரில் அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சித் தலைவி காா்த்திகா பிரதாப், பேரூராட்சி உறுப்பினா்கள் புவியூா் காமராஜ், எட்வின் ராஜ் மற்றும் நிா்வாகிகள் தாமரை பிரதாப், பொன்.ஜான்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதையடுத்து, கொட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்று பட்டா வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com