குலசேகரம் அருகே 10 கடைகளில் தொடா் திருட்டு

குலசேகரம் அருகே ஒரே இரவில் 10 கடைகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே கோட்டூா் கோணம் விலக்குப் பகுதியில் பழைய இரும்புக் கடை உள்பட 5 கடைகள், திருநந்திக்கரையில் 2 பெட்டிக் கடைகள், பிணந்தோடு கொல்லாறை பகுதிகளில் ரப்பா் கடை உள்பட 3 கடைகள் என 10 கடைகளில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் திருட்டு, திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா். மேலும், காக்கச்சல் பகுதியில் இந்துசங்கா் என்பவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து, காரிலிருந்த பா்ஸை திருடிச் சென்றனராம். அதில், ரூ. 2 ஆயிரம் இருந்ததாம். இச்சம்பவங்கள் தொடா்பான புகாா்களின்பேரில் குலசேகரம் போலீஸாா் அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com